கம்பெனிகள் வருமான வரிக் கணக்கு தாக்கல்: காலக்கெடு அக்.31 வரை நீட்டிப்பு
தமிழகம் உள்பட நாடு முழுவதும் தணிக்கை தேவைப்படும் கம்பெனிகள் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் காலக்கெடுவை வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை
தமிழகம் உள்பட நாடு முழுவதும் தணிக்கை தேவைப்படும் கம்பெனிகள் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் காலக்கெடுவை வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை வருமான வரித் துறை நீட்டித்துள்ளது.
தணிக்கை தேவைப்படும் கம்பெனிகள் 2017-18-ஆம் நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2018-19) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய, செப்டம்பர் 30 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்த அவகாசம் அக்டோபர் 15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்தக் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினர் மீண்டும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.