தமிழ்நாடு

அளவு குறைவாக பெட்ரோல் விற்பனை: 127 பெட்ரோல் பங்குகள் மீது நடவடிக்கை 

DIN

சென்னை: சட்ட விதிகளுக்கு புறம்பாக அளவு குறைவாக பெட்ரோல் விற்பனை செய்த  127 பெட்ரோல் பங்குகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் பங்குகளில் அளவு குறைவாக பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக பரவலாக புகார் எழுந்து வந்தது. இதன் காரணமாக தமிழக அரசின் தொழிலாளர் துறை சார்பாக அக்டோபர் 11, 12 மற்றும் 13 ஆகிய மூன்று நாட்களில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்குகளில் சோதனை நடத்தப்பட்டது. 

இதில் சென்னை மண்டலத்தில் 34 பங்குகளிலும்,  கோவையில் 23 பங்குகளிலும், திருச்சி  மண்டலத்தில் 30 பங்குகளிலும் மற்றும் மதுரை மண்டலத்தில் 30 பங்குகளிலும் அளவு குறைவாக பெட்ரோல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இனி இதுபோல சட்ட விதிகளுக்கு புறம்பாக அளவு குறைவாக பெட்ரோல் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT