தமிழ்நாடு

சபரிமலை கோயிலில் பழக்கப்பட்டுவரும் பண்பாடுதான் முக்கியம், பெண்பாடு முக்கியமில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

DIN

சபரிமலை கோயிலில் பழக்கப்பட்டுவரும் பண்பாடுதான் முக்கியம், பெண்பாடு முக்கியமில்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு இன்று காலை ஆந்திராவை சேர்ந்த செய்தியாளர் கவிதா, பெண்ணியவாதி ரஹானா பாத்திமா ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றனர். இருவரும் சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை நெருங்கியதும் பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னிதானம் முன் பக்தர்கள் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து பேராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்க பக்கதர்கள் மறுத்துவிட்டனர். நிலைமையை உணர்ந்த கேரள அரசு, சபரிமலையில் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப உத்தரவிட்டது. இதனால் சபரிமலை சன்னிதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் தனது டிவிட்டர் பதிவில்,
ஐய்யப்பன் கோயிலின் பன்னெடுங்காலமாக பழக்கப்பட்டுவரும்......பண்பாடு..பாதுகாக்கப்பட வேண்டும்....அங்கு...பெண்பாடு முக்கியமில்லை...பழக்கப்பட்டுவரும்...பண்பாடுதான் முக்கியம்...இது மூடநம்பிக்கையல்ல...முடிவான நம்பிக்கை..இது தீர்க்கக்கூடிய..நம்பிக்கையல்ல...தீர்க்கமான..தீவிரமான நம்பிக்கை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT