தமிழ்நாடு

டிசம்பரில் கட்சி அறிவிப்பு இல்லை; சபரிமலையில் ஐதீகம் பின்பற்றப்பட வேண்டும்: ரஜினி

DIN


சென்னை: சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். ஆனால் அதே சமயம் ஐதீகம் பின்பற்றப்பட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினி நடித்து வரும் பேட்ட என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வாராணசியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ரஜினி அளித்த பதிலில், தான் தொடங்கவிருக்கும் கட்சிப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. ஆனால், டிசம்பர் 12ம் தேதி கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று கூறினார்.

மேலும், மீ டூ (#MeToo) என்பதை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் ரஜினி கூறினார்.

சபரிமலை விவகாரம் குறித்த கேள்விக்கு ரஜினி அளித்த பதிலில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். அதே சமயம், காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை மாற்றக் கூடாது என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT