பெட்ரோல், டீசல் விலை 5-ஆவது நாளாக குறைப்பு
பெட்ரோல், டீசல் விலை 5-ஆவது நாளாக தொடர்ந்து விலை குறைந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை 5-ஆவது நாளாக தொடர்ந்து விலை குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10-ஆக இருந்தது.
அதைத் தொடர்ந்து மறுநாள் 22 பைசாவும், 19-ஆம் தேதி 25 பைசாவும், 20-ஆம் தேதி 41 பைசாவும், 21-ஆம் தேதி 36 பைசாவும் தொடர்ந்து விலை குறைக்கப்பட்டது. அதையடுத்து திங்கள்கிழமை 32 பைசா விலை குறைந்து ஒரு லிட்டர் ரூ.84.64-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் டீசல் விலை 17-ஆம் தேதி ரூ.80.04-ஆக இருந்தது. 18-இல் 11 பைசாவும், 19-இல் 11 பைசாவும், 20-இல் 13 பைசாவும், 21-இல் 18 பைசாவும் விலை குறைந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை 29 பைசா விலை குறைந்து லிட்டர் ரூ.79.22-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 5 நாள்களில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.1.46-ம், டீசல் விலை 82 பைசாவும் குறைந்துள்ளது.