தமிழ்நாடு

முல்லைப் பெரியாறுக்கு பதில் புதிய அணையால் தமிழகத்துக்கு பேராபத்து: துரை முருகன்

முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசுக்கு அனுமதி கிடைத்திருப்பது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்துக் கூறியுள்ளார்.

DIN


சென்னை: முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசுக்கு அனுமதி கிடைத்திருப்பது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்துக் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த துரை முருகன், கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்த சுற்றுச்சூல் அனுமதியை பெற்றிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கட்டப்பட்டால் அது தமிழகத்துக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். 

வெள்ளம், சபரிமலை என பல பிரச்னைகள் இருந்தாலும் கேரள அரசு காரியத்தில் கண்ணாக உள்ளது. முல்லைப் பெரியாறுக்கு அருகே பேபி அணை கட்ட தமிழகத்தால் முடியவில்லை. சுற்றுச் சூழல் பாதிக்கும் என்று கூறி அனுமதி மறுக்கப்படுகிறது.

ஆனால், கேரளா அணை கட்ட எப்படி சுற்றுச்சூழல் பாதிப்பு வராது என்று அனுமதி வழங்கினார்கள் என்று தெரியவில்லை என துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

SCROLL FOR NEXT