சென்னை: தென் தமிழகத்தில் நாளை ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமையன்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிழக்கு திசையில் காற்று வலுப்பெற்று வருவதால் தென் தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.