தமிழ்நாடு

தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ஆம் தேதி அரசு விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு 

தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ஆம் தேதி அரசு விடுமுறை என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

சென்னை: தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ஆம் தேதி அரசு விடுமுறை என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது வரும் நவமபர் மாதம் 6-ஆம் தேதியன்று (செவ்வாய்) கொண்டாடப்படுகிறது. அன்று எப்போதும் போல அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ஆம் தேதி அரசு விடுமுறை என்று  தமிழக அரசு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் வரும் நவமபர் மாதம் 6-ஆம் தேதியன்று (செவ்வாய்) அரசு விடுமுறையாகும். 

ஆனால் தற்போது பல்வேறு தரப்புகளில் இருந்தும் வந்த கோரிக்கையினை அடுத்து, தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கபப்டுகிறது. 

இதற்கு பதிலாக வரும் நவம்பர் 10-ஆம் தேதி வேலை நாளாக கருதபப்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT