ஜெயலலிதா நினைவிட விவகாரம்: விசாரணை ஒத்திவைப்பு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதுதொடர்பாக, தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல். ரவி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் அமைத்தால், அது தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே, மெரீனாவில் அவருக்கு நினைவிடம் கட்ட அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வரும் 18 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.