தமிழ்நாடு

மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை: முதல்வருடனான சந்திப்பு குறித்து பொன்னார் 

மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை: நடத்தியதாக சந்திப்பு குறித்து மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

DIN

சென்னை: மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை: நடத்தியதாக சந்திப்பு குறித்து மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமியை மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வியாழனன்று சந்தித்து பேசினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:

முதல்வரைச் சந்தித்து அவருக்கு விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகளை தெரிவித்தேன். பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை பற்றிய நீதிமன்ற உத்தரவையொட்டி ஆளுநர் பன்வாரிலால் ஆலோசித்து முடிவு செய்வார்.  அவரது ஆலோசனை குறித்து யாரும் எதுவும் கருத்து சொல்ல முடியாது. 

முதல்வரிடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்ட பணிகள் பற்றி ஆலோசனை நடத்தினேன்.  விரைவில் கன்னியாகுமரியில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நுற்றாண்டு விழாவின்போது, அந்த மாவட்டத்திற்கு என தனிப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண் கவர் பொருங்கோட... மேகா!

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய ‘சிங்காரி’ பாடல் வெளியீடு!

பல பொருள் - ஒரு சொல் பயில்க

குரலினிது... ஷ்ரேயா கோஷால்!

ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த ஜடேஜா; எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சச்சினின் சாதனை!

SCROLL FOR NEXT