தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: அமைச்சர் உதயகுமார்

DIN

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். 

வெள்ளத் தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
பேரிடர் மேலாண்மைத் துறையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விரைவில் வரவுள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

மழையின் நிலை மற்றும் தீவிரம் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் தேசிய கடல் ஆராய்ச்சி மையத்துடன் வருவாய் துறையினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் மூலம் 5 நாட்களுக்கு முன்பாக மழையின் தீவிரத்தை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இயலும். 

சென்னையில் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மக்களின் புகார் தொடர்பான மனுக்களை பரிசீலிக்க 5000 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 32 மாவட்டங்களிலும் நேரடியாகவும், காணொலிக்காட்சி மூலமாகவும் ஆய்வு பணிகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT