தமிழ்நாடு

தனுஷ்கோடி அரிச்சல்முனையில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை

DIN


ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் சூறைக் காற்று வீசுவதுடன், கடல் சீற்றமாக காணப்பட்டதால் வெள்ளிக்கிழமை அங்குள்ள அரிச்சல்முனைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல போலீஸார் தடை விதித்தனர்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் தனுஷ்கோடி கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. அங்கு பலத்த சூறைக்காற்றும் வீசுகிறது. மேலும் அரிச்சல்முனைப் பகுதியில் கடல் 100 மீட்டர் வரை உள்புகுந்துள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் அங்கு செல்வதை தடுக்க தனுஷ்கோடி கம்பிபாடு அருகே காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர். இதனிடையே அங்கு சீறிப் பாயும் அலையில் பாதுகாப்பில்லாமல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனுஷ்கோடி அரிச்சல்முனையில் கடல் சீற்றம் காரணமாக கம்பிபாடு பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் உள்ளே வராமல் தடுப்பதற்காக காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்பு கம்பி வேலி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

போடி அருகே வனப் பகுதியில் காட்டுத் தீ

அருளால் இறைவனை அறிய வேண்டும்: சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா

மேகாலயாவில் ரோல்பால் போட்டி தமிழக அணி வீரா்களுக்கு வழியனுப்பு விழா

சாலை விபத்தில் மதுரை திமுக நிா்வாகி பலி

SCROLL FOR NEXT