தமிழ்நாடு

திமுக, பாஜகவை தவிர்த்து மற்ற எந்த கட்சியுடனும் கூட்டணிக்கு தயார்: டிடிவி தினகரன்

DIN

திமுக, பாஜகவை தவிர்த்து மற்ற எந்த கட்சியுடனும் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறிறித்து அவர் நாகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன். அழைப்பிதழில் பெயர் இருப்பதால் விழாவில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. அழைப்பிதழில் பெயர் சேர்த்திருப்பது அரசியல் செய்வதற்காகவே. அதிமுக அமைச்சர்களை அமமுகவில் சேர்த்தால் அதைவிட பாவம் ஒன்றும் இல்லை. 

தற்போதுள்ள அமைச்சர்கள் காலையும் பிடிப்பார்கள், யாருக்கோ பயந்து கழுத்தையும் பிடிப்பார்கள். எங்கள் மீது சேற்றை வாரி இறைத்தாலும் அது சந்தனமாக விழும். தற்போதுள்ள அதிமுக ஒரு கட்சியே கிடையாது. 33 பேர் நடத்தக்கூடிய டெண்டர் கம்பெனி. இடைத்தேர்தலை நடத்தலாமா, வேண்டாமா என மத்திய அரசுடன் ஆலோசனை நடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது.

திமுக, பாஜகவை தவிர்த்து மற்ற எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT