தமிழ்நாடு

புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

DIN

புதுச்சேரி அரசுப் போக்குவரத்து கழகத்தில் நிரந்தர ஊழியர்கள் 450 பேரும், ஒப்பந்த ஊழியர்கள் 250 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஊழியர்கள் தரப்பில் இதுதொடர்பாக துறை அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்நிலையில், அனைத்து தொழிற்சங்கங்களும் செவ்வாய்கிழமை மாலை முதல் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.  இதனால் மாலை 6 மணி முதல் அரசுப் பேருந்துகளின் சேவை முடங்கியது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளானார்கள்.

இதையடுத்து, அக்டோபர் 6, 12 ஆம் தேதிகளில் ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கப்படும் என புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் புதன்கிழமை வாபஸ் பெறப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT