சென்னையில் பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை புதிய உச்சத்தை தொட்டது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை புதிய உச்சத்தை தொட்டது. இது சனிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 17 காசுகள் அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.80 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 79.08 ஆகவும் உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே மிக அதிக அளவில் கலால் வரி விதிக்கப்படும் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.79.23-க்கும் சனிக்கிழமை விற்பனையானது.