தமிழ்நாடு

அக்.3 முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

DIN

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள்  வரும் 3 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கவுள்ளனர்.
 ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து மீனவ சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட மீனவ சங்க செயலாளர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். இதில், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க வேண்டும். சேதமடைந்த விசைப்படகுகளுக்கு படகு ஒன்றுக்கு ரூ. 30 லட்சம் வரை இழப்பீடு வழங்கிட வேண்டும். இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க வேண்டும்.  தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலை உயர்த்தி வழங்கிட வேண்டும். 
டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 3ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
 மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் 8 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட அனைத்து மீனவர்களையும் ஒன்றிணைத்து ராமநாதபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்தில் மீனவ சங்கத் தலைவர்கள் சகாயம், எமரிட் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT