முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம்: நீதிமன்றம் பிறப்பித்த தடாலடி உத்தரவு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் என்று தெரிவித்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:36 AM
பகிர்:


சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் என்று தெரிவித்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

பணம் பெற்றுக் கொண்டு லாப நோக்கத்துடன் டியூசன் எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறித்து புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம். எனவே டியூசன் எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 8 வாரத்துக்குள் கட்டணமின்றி இலவச தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், பள்ளி, கல்லூரிகளில், பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க பிரத்யேகமாக இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →