தமிழகத்தில் 2 - 4 டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகமாகும் இடங்களின் விவரம்
தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் 2 - 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் 2 - 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பகல் வேளையில் இன்றும் வெப்பநிலை இயல்வை விட அதிகமாகவே இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 2 - 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரக் கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல, தெற்கு உள் கர்நாடகம் முதல் குமரி கடல் வரை காற்றழுத்தத் தாழ்வு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.