அதிமுக-பாமக கூட்டணி பேரக் கூட்டணி என்று பொங்கலூர் இரா. மணிகண்டன் விமர்சனம் செய்துள்ளார்.
பாமகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் பொங்கலூர் இரா. மணிகண்டன் இன்று அறிவித்துள்ளார். மேலும் கொங்கு மண்டலம் பொறுப்பாளர் பதவியில் இருந்தும் விலகுவதாகவும் அவர் தெரிவித்துளளார். கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் ரஞ்சித் பாமகவில் இருந்து விலகிய நிலையில் தற்போது பொங்கலூர் இரா. மணிகண்டன் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
டயர் நக்கிகள் என்று சேலத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது நானும் அருகில் இருந்தேன். அதிமுக-பாமக கூட்டணி பேரக் கூட்டணி. தாமதமாக நான் ஏன் விலகுகிறேன் என்றால், மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. திண்டுக்கல் தொகுதிக்கு பொறுப்பாளராக என்னை நியமித்தார்கள்.
அந்த தொகுதி மட்டுமல்லாது எல்லா தொகுதிக்கும் நான் களப்பணிக்கு சென்றபோது, மக்கள் இந்த கூட்டணியை காரி காரி துப்புகிறார்கள். கேவலமாக பேசுகிறார்கள். திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என கூறிவிட்டு அதிமுக கூட்டணி வைத்துள்ளனர். முதல்வரை மோசமாக விமர்சித்துவிட்டு தற்போது அவருடனே கூட்டணி வைத்துள்ளார் ராமதாஸ்.
அதிமுகவுடன் திடீரென கூட்டணி அமைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.