தமிழ்நாடு

அரசியலுக்கு சீக்கிரம் வந்திருக்க வேண்டும்; எஞ்சிய வாழ்க்கை மக்களுக்கானது: சொன்னது?

DIN


அரசியலுக்கு இன்னும் சீக்கிரம் வந்திருக்க வேண்டும்; தாமதமாக வந்தது வருத்தம் அளிக்கிறது. தனது எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காக பணி செய்வதுதான் என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மக்களவைத் தொகுதி வேட்பாளர் டி.பி.எஸ். பொன்குமரன், விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் தா. நடராஜன் ஆகியோரை ஆதரித்து அவர் பேசியது: நாட்டை பிளவுபடுத்தும் அசுத்தமான சக்தி அகற்றப்பட வேண்டும். தூத்துக்குடியில் தற்போதும் துயரம் நீங்கியதாக  இல்லை. காவல்துறையை இந்த அரசு ஏவல்துறையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி உருவாக உந்தித் தள்ளியதில் தூத்துக்குடியும் ஒன்றாகும்.

தமிழகம் இந்தியாவின் தலை எழுத்தாக மாற வேண்டும். அரசியல் அஜாக்கிரதையால் தூத்துக்குடியில் புற்றுநோய் அதிகரித்துள்ளது. அதைவிட கொடிய நோயான இந்த அரசும், கழகங்களும் அகற்றப்பட வேண்டும். பிரதமரை தேர்ந்தெடுக்க நடைபெறும் இந்த தேர்தலாக இருந்தாலும் உரிமைகளை தட்டிக்கேட்கும் பிரதிநிதி தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டும். எங்களுக்கு ஓய்வு என்பதில் நம்பிக்கை இல்லை. எனது எஞ்சிய வாழ்க்கை மக்களுக்கானது. இது சினிமா வசனமாக இல்லாமல் வாழ்க்கை தரும் செய்தியாக இருக்கும். தயவு செய்து எனது வாழ்வை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு புதிய அரசியல் சூழல் வளர நாம் காரணமாக இருக்கப் போகிறோம். 

 அதற்காக விதை தூவும் நாள் ஏப்ரல் 18. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் வாக்குச்சாவடிகளை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் துணிச்சலோடு கண்காணிக்க வேண்டும். கொள்ளையர்கள் வாக்குச்சாவடிகளையும் கொள்ளையடித்து விடாமல் தமிழகத்தின் பாதுகாவலர்களாக நின்று காக்க வேண்டியது நமது கடமை. நேர்மை, சத்தியம் இவை வெல்லும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT