தமிழ்நாடு

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த சலுகை எனக்கு இல்லையா?: வாக்குச்சாவடியில் இளம்பெண்  தர்ணா   

வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த சலுகை எனக்கு இல்லையா? என்று கோரி  வாக்குச்சாவடியில் இளம்பெண்  ஒருவர் தர்ணா இருந்த சம்பவம் நடந்துள்ளது   

DIN

அறந்தாங்கி: வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த சலுகை எனக்கு இல்லையா? என்று கோரி  வாக்குச்சாவடியில் இளம்பெண்  ஒருவர் தர்ணா இருந்த சம்பவம் நடந்துள்ளது   

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள எருக்கலங்கோட்டை என்னுமிடத்தில் உள்ள அரசுப் பள்ளியில்  நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்தது.

அங்கு வாக்களிக்க வந்த தேன்மொழி என்னும் இளம்பெண்னுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால், வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இதேபோல் சென்னையில் வியாழன் காலை வாக்களிக்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் பட்டியலில் அவரது பெயர் இல்லை. ஆனாலும் அங்கிருந்த தேர்தல் அதிகாரியின் சிறப்பு அனுமதியின் பேரில் அவருக்கு வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டது.

அதேபோல தனக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி தேன்மொழி வாக்குச் சாவடிக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையிலும் அவரது தர்ணா தொடரவே அதிகாரிகளை அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ஆரோவில் சா்வதேச நகரில் சம்ஸ்கிருத ஆராய்ச்சி மாநாடு

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

மறவனூா் அருகே லாரி கவிழ்ந்து கொசுப்புழு ஒழிப்பு ஊழியா் பலி

SCROLL FOR NEXT