தமிழ்நாடு

காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை செல்ல பேருந்து வசதி இல்லை: கோயம்பேட்டில் போராட்டம்

DIN


சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பேருந்து வசதி இல்லாததால், ஏராளமான பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்து வருகிறார்கள்.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை மற்றும் இதர கோயில்களுக்குச் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்தனர். ஆனால் அங்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரை மணி நேரத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுவதாகவும், அதிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது, தனியார் பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.

நேரம் செல்ல செல்ல திருவண்ணாமலைக்குச் செல்ல ஏராளமானோர் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வருவார்கள் என்பதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

ஓசூரில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல பேருந்து கிடைக்காததால், அங்கும் ஏராளமான பயணிகள் தவித்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT