தமிழ்நாடு

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு: குமரி கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு

DIN


இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பைத் தொடந்து கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோரப் பாதுகாப்புக் குழுமப் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளில்  கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 
இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து  இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. அண்டை நாடான இந்தியாவில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
கடல்வழியாகத் தீவிரவாதிகள் ஊடுருவலைக் கண்காணிக்கும் நோக்கில் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து கன்னியாகுமரி கடல் பகுதியில் அதிநவீன ரோந்துப் படகில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் படகுகளையும் போலீஸார் சோதனை செய்தனர். மேலும், சந்தேகத்துக்கு இடமான வகையில் கடலில் படகுகள் செல்வதாகத் தெரிந்தால் உடனடியாகத் 
தகவல் தெரிவிக்க வேண்டுமென மீனவர்களிடம் போலீஸார் அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT