தமிழ்நாடு

தேர்தல் பிரசாரங்களில் வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்கத் தடை கோரி மனுத்தாக்கல் 

தேர்தல் பிரசாரங்களின் போது வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி,மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

DIN

மதுரை: தேர்தல் பிரசாரங்களின் போது வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி,மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தங்க மீனாட்சி என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரங்களின் போது வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்கத் தடை விதிக்க வேண்டும்.

அவ்வாறு ஆரத்தி எடுக்கும் சமயம் வேட்பாளர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி அளிக்கின்றனர்.

இது பிரசாரத்தின் போது நிதியுதவி வழங்கக் கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT