தமிழ்நாடு

18 மருந்துகள் தரமற்றவை: மத்திய தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

DIN


சந்தையில் விற்பனை செய்யப்படும் 18 மருந்துகளை தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை ஹரியாணா, மகராஷ்டிரம், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டவை. தென்னிந்தியாவைப் பொருத்தவரை, கர்நாடக மாநிலம் பெங்களூரில் தயாரிக்கப்பட்ட இரு மருந்துகள் தரமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 988 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் 970 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
அதேவேளையில், காய்ச்சல், குடற்புழு நீக்கம், வாயு அமிலப் பிரச்னை, கிருமித் தொற்று, வயிற்றுப் புண் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் 18 மருந்துகள் போலியாகவும், தரமற்றவையாகவும் இருந்தது கண்டறியப்பட்டது. 
இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்  இணையப் பக்கத்தில்  வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், நுரையீரலுக்கு சுவாசக் காற்றை அனுப்பும் கருவிகள், எக்ஸ்-ரே கருவி, புற்றுநோய் சிகிச்சைக்கான பிஇடி கருவி, இதயத் துடிப்பை மீட்டெடுக்கும் மின்னழுத்தக் கருவி, டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளிட்டவை மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் 
வரையறை செய்தது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT