தமிழ்நாடு

அத்திவரதர் தரிசனம் நீட்டிப்பு செய்யப்படாது! - அமைச்சர் தகவல்

அத்திவரதர் தரிசனம் நீட்டிப்பு செய்யப்படாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

DIN

அத்திவரதர் தரிசனம் நீட்டிப்பு செய்யப்படாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆகம விதிப்படி இதற்கு முன்னதாக எவ்வாறு நடந்ததோ, அந்த முறையே தற்போதும் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் வைபவ விழா கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் 30 நாட்கள் சயனக்கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். கடந்த 43 நாட்களில் சுமார் 90 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். தற்போதைய சூழலில் அத்திவரதரை தரிசிக்க 12 மணி நேரம் ஆவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். 

வைபவத்தின் 44-ம் நாளான இன்று அத்திவரதர், கிளிப்பச்சை நிறத்தில் பட்டாடை அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். இன்று காலை முதல் தற்போது வரை 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துச் சென்றுள்ளனர். மேலும், 3 லட்சம் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அறிவித்தபடி, வருகிற ஆகஸ்ட் 16-ம் தேதி இரவுடன் அத்திவரதர் வைபவ விழா நிறைவடையவுள்ளது. தொடர்ந்து, ஆகஸ்ட் 17-ம் தேதி ஆகம விதிப்படி அத்திவரதருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்படுகிறார். 

விழா இன்னும் ஒரு சில தினங்களே நடக்கவிருப்பதால் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. 

இதற்கிடையே, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதால், அத்திவரதர் வைபவ விழாவை நீட்டிப்பு செய்ய வேண்டும் என பக்தர்கள் பலர் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.  

இந்த சூழ்நிலையில், இதுகுறித்து பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அத்திவரதர் தரிசனம் நீட்டிப்பு செய்யப்படாது என்றும் ஆகமவிதிப்படி, இதற்கு முன்னதாக எவ்வாறு நடந்ததோ அதுவே இந்த முறையும் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT