தமிழ்நாடு

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை ஆக. 27 வரை காவலில் வைக்க உத்தரவு

DIN


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரையும் ஆகஸ்ட் 27 -ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் செவ்வாய்க்கிழமை இரவு அடைக்கப்பட்டனர். 
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றபோது ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்துச் சென்றனர். 
இதனையடுத்து, அந்தப் படகை பறிமுதல் செய்த அவர்கள், அதில் இருந்த மீனவர்கள் கிகிங்கர் (45), வில்லர் (48), நெல்சன் (27), இன்னாசி உள்ளிட்ட 7 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி யாழ்ப்பாணம் நீரியல்துறையிடம் ஒப்படைத்தனர். 
அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்குப் பின் அரசு நீதிபதி ஜூட்சன் வீட்டில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.  
அப்போது, மீனவர்களை ஆகஸ்ட் 27 -ஆம் தேதி வரை சிறையில் நீதிபதி அடைக்க உத்தரவிட்டார்.  அதையடுத்து, அன்று இரவு 7 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT