தமிழ்நாடு

ஆசிய தடகளப்போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு திமுக ரூ. 5 லட்சம் நிதியுதவி 

ஆசிய தடகளப்போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவுக்கு திமுக சார்பாக ரூ. 5 லட்சம் நிதியுதவியை கட்சித் தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.

DIN

சென்னை: ஆசிய தடகளப்போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவுக்கு திமுக சார்பாக ரூ. 5 லட்சம் நிதியுதவியை கட்சித் தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் சார்பாக திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இன்று (19-8-2019), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், தோஹா ஆசிய தடகள போட்டியில்  4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற தமிழக வீரர் இலால்குடி வட்டம், வலிதியூரைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமிருந்து  ரூ.5,00,000/-(ரூபாய் ஐந்து இலட்சம்) காசோலையினை நேரில் பெற்றுக் கொண்டார்' என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.79,000 பறிமுதல்

திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT