தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைது 

தமிழக மீனவர்கள் நால்வர் புதனன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DIN

புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் நால்வர் புதனன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த  நான்கு மீனவர்கள், புதனன்று இலங்கையின் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களது நாட்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாக, மீன்வளத் துறை உதவி இயக்குநர் குமரேசன் தெரிவித்தார். 

கடந்த இரண்டு நாட்களில்  இலங்கை கடற்படையினரால் நடக்கும் இரண்டாவது கைது நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT