தமிழ்நாடு

காஷ்மீர் விவகாரத்தில் திமுக நிலைப்பாட்டை மேற்கோள் காட்டும் பாகிஸ்தான் ரேடியோ!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தில்லியில் போராட்டம் நடத்தப் போவதாக நேற்று அறிவித்தது.

DIN


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தில்லியில் போராட்டம் நடத்தப் போவதாக நேற்று அறிவித்தது.

திமுகவின் அறிவிப்பினை, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக  கருத்துக் கூறி வரும் பாகிஸ்தானின் அரசு வானொலியும் செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, இந்தியாவில் நடந்து முடிந்த 2019 பொதுத் தேர்தலில் மூன்றாவது பெரும் கட்சியாக வெற்றி பெற்ற திமுக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது என்று செய்தி வெளியிட்டு, அது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளது.

இதற்கு தனது கருத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, திமுக குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதாகக் கூறும் ஸ்டாலின் குரல் இன்று பாகிஸ்தான் ரேடியோவில் ஒலிக்கிறது. திமுகவின் தேசத்துரோகத்தின் உச்ச கட்டம்.
@mkstalin voice in support of special status for J&K in pak radio?nation understands true colour of DMK என்று தமிழிசை பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT