முகப்பு
தமிழ்நாடு

உயர்கிறது தி.மு.க. இளைஞரணி உறுப்பினர்களின் வயது வரம்பு: உதயநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் 

தி.மு.க. இளைஞரணி உறுப்பினர்களின் வயது வரம்பை உயர்த்தி, அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

சென்னை: தி.மு.க. இளைஞரணி உறுப்பினர்களின் வயது வரம்பை உயர்த்தி, அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஞாயிறன்று நடைபெற்றது.  செயலாளராக அவர் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு முதலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உதயநிதி பேசிய பிறகு இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில்   முக்கியமான சில தீர்மானங்கள் பின்வருமாறு:

* தமிழகத்தில் தபால் மற்றும் ரெயில்வே துறை பணிகளில் வட மாநிலத்தவர் அமர்த்தப்படுவதற்கு கண்டனம். 

* தமிழகத்தில் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 

* மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள தேசிய கல்விக்கொள்கை வரையறையை திரும்பப் பெற வேண்டும்.

* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தி.மு.க. இளைஞரணியின் மண்டல மாநாடு நடத்தப்பட்டு பின்னர், மாநில மாநாடு நடத்தப்படும்.

* தி.மு.க. இளைஞரணி உறுப்பினர்களின் வயது வரம்பு 35 வரை நிர்ணயிக்கப்படுகிறது.

* விரைவில் 30 லட்சம் பேர்களை இளைஞரணியில் சேர்க்க வேண்டும்.

இவை உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →