தமிழ்நாடு

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து 

ஞாயிறன்று பிறந்தநாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

DIN

சென்னை: ஞாயிறன்று பிறந்தநாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

தேமுதிக தலைவரான விஜயகாந்த் ஞாயிறன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்குழந்தைகள் விஜயகாந்திற்கு இனிப்பு ஊட்டி விட்டனர்.

இந்நிலையில் ஞாயிறன்று பிறந்தநாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

பூங்கொத்துடன் அவர் அனுப்பியுள்ள பிறந்தநாள் வாழ்த்து கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

கலை ஆர்வம் மிக்கவராய் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர் நீங்கள். அரசியல், பொது வாழ்வில் சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள். நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

SCROLL FOR NEXT