தமிழ்நாடு

ஜனநாயகத்துக்கு குரல் கொடுத்தால் தேச விரோதியா?: மு.க.ஸ்டாலின்

DIN


ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்தால் தேச விரோதி என்பதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
திராவிடர் கழகத்தின் 75-ஆம் ஆண்டையொட்டி பவள விழா மாநாடு நிறைவு விழா சேலம் கோட்டை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. அதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியது:
இட ஒதுக்கீடு மூலம் இந்திய அரசியல் சாசன சட்டத்தை நிர்ணயித்தது, சுய மரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம், இருமொழிக் கொள்கை, ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என பங்களிப்பை வழங்கியதற்கு பெரியார்தான் காரணம்.   பெரியார், அண்ணா ஆகியோர் சில காலம் பிரிந்திருந்தாலும், ஒரே கொள்கையில் பயணித்து, பின்னர் சேர்ந்தனர்.  
திராவிட இயக்கத்தை வீழ்த்த நினைத்தவர்கள், வீழ்ந்துவிட்டார்கள். திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. திராவிடர் கழகம் முன்பைவிட வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்து வரும் நம்மை தேச விரோதிகள், பிரிவினைவாதிகள் எனக் கூறுகின்றனர். மாநிலத்தையும், மாவட்டத்தையும் பிரித்து வரும் அவர்கள்தான் பிரிவினைவாதிகள். 
கடன் வாங்கிய பெரு முதலாளிகளை தப்ப விட்டவர்கள் தேசியவாதிகள், கேள்வி கேட்பவர்கள் தேச விரோதிகளா?  ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் வந்தால் முதலில் தட்டிக் கேட்போம்.
மத்திய அரசு நாடகம்: தமிழகத்தை மத்திய அரசு பல்வேறு வகைகளில் பழிவாங்குகிறது. 
இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. மோட்டார் வாகனத் துறை மிகவும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வாகனங்கள் விற்பனை 31 சதவீதம் குறைந்துவிட்டது. இந்தியப் பொருளாதாரம் நிதிச் சிக்கலில் தவித்து வருகிறது. 
இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே காஷ்மீர் அந்தஸ்து ரத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது போன்ற நாடகங்களை திட்டமிட்டு நடத்தி வருகின்றனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவைப் பயிரில் உயா் விளைச்சலுக்கான உழவியல் நுட்பங்கள்

எருக்கூரில் அமுது படையல் விழா

வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதம்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாா்டுகளின் எண்கள் மாற்றம் -நோயாளிகளின் நீண்ட கால குழப்பத்துக்கு தீா்வு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT