தமிழ்நாடு

ரூ.30 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்

DIN


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.30 ஆயிரத்தை நெருங்குகிறது. ஆபரண தங்கம் புதன்கிழமை   பவுனுக்கு ரூ.264  உயர்ந்து, ரூ.29,704-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஓரிரு நாள்களில் பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தை தாண்டும் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் விலை உயர்ந்து வந்த நிலையில், ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து வந்த நிலையில், ஆகஸ்ட் 7-ஆம் தேதி  விலை ரூ.28 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பிறகும் தொடர்ந்து விலை உயர்ந்து கடந்த 13-ஆம் தேதி ரூ.29 ஆயிரத்தை தொட்டது. அதன் பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தநிலையில், கடந்த 24-ஆம் தேதி  பவுன் தங்கம்  ரூ.29 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 27 -ஆம் தேதி தங்கம் விலை சற்று குறைந்திருந்தது.
இந்த நிலையில், ஆபரண தங்கம் புதன்கிழமை  பவுனுக்கு ரூ.264  உயர்ந்து, ரூ.29,704-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.33 உயர்ந்து, ரூ.3,713-க்கு விற்பனையானது. இதுபோல, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.90 உயர்ந்து ரூ.51.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,900 உயர்ந்து, ரூ.51,900 ஆகவும் இருந்தது. தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறியது: 
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில்  பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் கட்டுமானத் துறையில் ஏற்பட்ட சரிவு, வளர்ந்த நாடுகளின் பண மதிப்பு சரிவு, வேலைவாய்ப்பு குறியீடு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் மட்டுமே அதிக அளவு  முதலீடு செய்து வருகின்றனர். 
இதனால், தங்கம் விலை வழக்கத்தைவிட உயர்ந்து வருகிறது. ஓரிரு  நாள்களில் பவுன் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டும் வாய்ப்பு உள்ளது.  தங்கத்துடன் தொடர்புடையதாக இருப்பதால், வெள்ளி விலை உயர்வும் தவிர்க்கமுடியாத ஒன்றாக உள்ளது  என்றார் அவர்.  
 புதன்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்        3,713
1 பவுன்  தங்கம்       29,704
1 கிராம் வெள்ளி        51.90
1 கிலோ வெள்ளி    51,900
செவ்வாய்க்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,680
1 பவுன் தங்கம்       29,440
1 கிராம் வெள்ளி    50.00
1 கிலோ வெள்ளி    50,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT