முகப்பு
தமிழ்நாடு

கோவையில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை 

கோயம்புத்தூரில் 5 இடங்களில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

Updated On : 29 ஆகஸ்ட், 2019 at 10:07 AM
பகிர்:

கோயம்புத்தூரில் 5 இடங்களில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கோவை, ராமேசுவரம் உள்ளிட்டப் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கோயம்புத்தூரில் 5 இடங்களில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

உக்கடம், கோட்டைமேடு, பிலால் எஸ்டேட், ஜிஎம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், காவல் துறையினரின் உதவியுடன் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி முகமது யாசின், சனபர் அலி, சதாம் உசேன், உமர் பாரூக், ஜமீசா முபின் ஆகிய 5 பேரின் வீடுகளில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.