தமிழ்நாடு

லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளை தமிழகத்திற்கு வருகிறது: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் 

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள பிரபல கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

DIN

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள பிரபல கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழகத்திற்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  இதற்காக புதனன்று அவர் புறப்பட்டு சென்றார்.

அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு அதிகாரிகள் சாய்குமார், விஜயகுமார், செந்தில்குமார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள பிரபல கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

இதேபோன்று டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துதல் மற்றும் அந்நோய்களுக்கான சிகிச்சைகள் மற்றும் கையாளும் முறைகள் தொடர்பான நோக்க அறிக்கையும் கையெழுத்தாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT