தேனி: பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக வைகை அணையில் இருந்து வியாழனன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக தமிழக நீர்நிலைகளில் பரவலாக நீர் நிரம்பியது. இதேபோன்று கர்நாடகாவில் உள்ள கபினி உள்ளிட்ட அணைகளிலும் நீர் நிரம்பி மேட்டூர் அணையை வந்தடைந்தது.
இதனையடுத்து வைகை, பெரியார் மற்றும் மேட்டூர் அணைகளில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன் உத்தரவிட்டார்.
இதன்படி, தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கும், முதல் போக சாகுபடிக்கும் பெரியார் அணையில் இருந்து விநாடிக்கு 300 கனஅடி வீதம் இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உத்தரவிடப்பட்டது. நீர்திறப்பால் தேனி, உத்தமபாளையம், போடி வட்டங்களில் 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அதேபோல் வைகை அணையில் இருந்தும் இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வியாழனன்று தண்ணீர் திறந்த்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.