முகப்பு
தமிழ்நாடு

கல்லூரி மாணவிகள் பேராசிரியர்களின் வீடுகளுக்குச் செல்லத்தடை! - சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவு

கல்லூரி மாணவிகள், பேராசிரியர்களின் வீடுகளுக்குச் செல்லக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:58 AM
பகிர்:

கல்லூரி மாணவிகள், பேராசிரியர்களின் வீடுகளுக்குச் செல்லக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் தொந்தரவு என்பதே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.  படிப்பதற்காக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகளை தங்களது வீடுகளுக்கு அழைக்கக்கூடாது. பேராசிரியர்கள் அழைத்தாலும் அவர்களது வீடுகளுக்கு மாணவிகள் யாரும் செல்லக்கூடாது. அதேபோன்று பேராசிரியர்களுடன் கல்லூரிச் சுற்றுலா செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. 

அவ்வாறு  ஆசிரியர்களின் வீடுகளுக்கோ அல்லது கல்விச் சுற்றுலாவோ செல்ல நேர்ந்தால், மாணவிகள்  பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்றுவிட்டுச் செல்ல வேண்டும். மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு இருந்தால் பேராசிரியர் ரீட்டா ஜான் தலைமையிலான பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுவிடம் புகார் தெரிவிக்கலாம் அல்லது துணை வேந்தரிடமும் நேரடியாக வந்து முறையிடலாம்.

தங்களது புகாரை மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கும் பட்சத்திலே நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எந்த பிரச்னையாக இருந்தாலும் கல்லூரி நிர்வாகத்தையோ அல்லது நியமிக்கப்பட்ட குழுவையோ மாணவிகள் அணுகலாம். 

பேராசிரியர்கள் மீது புகார் வரும் பட்சத்தில் அது உடனடியாக விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →