ஆதாரில் பெயர் மாற்ற மோடியைச் சந்திக்க வேண்டும்: ராஜ்நாத் வாகனத்தை நிறுத்த முயன்ற மர்ம நபர்!
நாடாளுமன்றம் அருகே மர்ம நபர் ஒருவர் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பாதுகாப்பு வாகனத்தை நிறுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடுஆதாரில் பெயர் மாற்ற மோடியைச் சந்திக்க வேண்டும்: ராஜ்நாத் வாகனத்தை நிறுத்த முயன்ற மர்ம நபர்!
நாடாளுமன்றம் அருகே மர்ம நபர் ஒருவர் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பாதுகாப்பு வாகனத்தை நிறுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றம் அருகே மர்ம நபர் ஒருவர் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பாதுகாப்பு வாகனத்தை நிறுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பாதுகாப்பு வாகனம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தை நெருங்கியபோது திடீரென்று ஒரு நபர் சாலையில் படுத்து வழிமறிக்க முயன்றார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பிற்பகல் 1.25 மணி அளவில் நடைபெற்றது.
இதன்பிறகு, அவர் உத்தரப் பிரதேச மாநிலம் குஷி நகரைச் சேர்ந்த விஷம்பார் தாஸ் குப்தா (35 வயது) என அடையாளம் காணப்பட்டார்.
இந்த சம்பவம் போலீஸார் கூறுகையில், "ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க தனக்கு அனுமதி அளிக்குமாறு அந்த நபர் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.