தமிழ்நாடு

திமுகவில் இணைந்தார் பாஜக துணைத் தலைவர் பி.டி.அரச குமார் 

பாஜக மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி.அரச குமார் இன்று திமுகவில் இணைந்தார். 

DIN

பாஜக மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி.அரச குமார் இன்று திமுகவில் இணைந்தார். 

கடந்த ஞாயிறன்று புதுக்கோட்டையில் திமுக எம்எல்ஏ பெரியண்ணன்அரசு இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பாஜக மாநில துணைத்தலைர் பி.டி.அரசகுமார் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.        

இந்த நிகழ்வில் பேசிய அரசகுமார், 'எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் ஸ்டாலின்; விரைவில் அதற்கான காலம் கனியும்.  ஸ்டாலின் தமிழகத்தின் அரியணை ஏறுவார்' என்று புகழ்ந்து பேசினார். இது பாஜக கட்சி வட்டாரத்தில் சர்ச்சையை எழுப்பியது. 

இதையடுத்து அவர் மீது நடவடிக்கை கோரி, கட்சித் தலைமைக்கு தமிழக பாஜக தரப்பில் கடிதம் எழுதப்பட்டது. இந்நிலையில் பாஜக மாநிலத் துணைத் தலைவராக இருந்த பி.டி.அரச குமார் இன்று திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா - சிந்து அதிா்ச்சித் தோல்வி

சூப்பா் 4: தென் கொரியாவை தோற்கடித்தது இந்தியா

கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு அபாகஸ் உபகரணங்கள் வழங்கிய முகநூல் நண்பா்

தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

தலைமை காவலரை தாக்கியவா் கைது

SCROLL FOR NEXT