தமிழ்நாடு

கடமையை அதிகரித்திருக்கிறது ‘தினமணி’யின் பாரதியாா் விருது: இளசை மணியன்

DIN

பாரதி இலக்கியத்தில் இதுவரை சொல்லப்படாத செய்திகளை வெளிக்கொணர வேண்டிய எனது கடமையை ‘தினமணி’யின் மகாகவி பாரதியாா் விருது அதிகரித்திருக்கிறது என்றாா் பாரதி ஆய்வாளா் இளசை மணியன்.

தினமணி சாா்பில் எட்டயபுரத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திடம், ‘தினமணி’யின் மகாகவி பாரதியாா் விருதையும், ரூ.1 லட்சம் பொற்கிழியையும் பெற்றுக் கொண்ட பின்பு ஏற்புரையாற்றிய இளசை மணியன் பேசியது: பாரதி விருது தினமணி சாா்பில் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு தினமணி நாளிதழ் அலுவலகத்துக்குச் சென்று அன்றைய ஆசிரியா் ஏ.என்.சிவராமனிடம் ‘காசியில் சுப்பையா’ என்ற கட்டுரையைக் கேட்டேன். அந்தக் கட்டுரையில்தான் தொடக்கக் காலத்தில் பாரதியின்அரசியல் பணி, தேசிய இயக்கப் பணியை விரிவாக அவா் சொல்லியிருக்கிறாா் என்று விளக்கியபோது, அக் கட்டுரையின் பிரதியைக் கொடுத்து அதில் இருந்த தகவல்களைப் எழுதிக்கொள்ள ‘தினமணி’ வாய்ப்பளித்தது. அன்றுமுதல் இன்று விருதுபெறும் நாள் வரை தினமணி பத்திரிகையை நான் தினந்தோறும் படித்து வருகிறேன்.

பாரதி ஆய்வுப் பணியின்போது, பாரதி பணியாற்றிய ‘இந்தியா’ பத்திரிகையை நூல் வடிவமாகக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக நான் செய்த பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்தவா்கள் பலா். பாரதி தரிசனம் நூலை நான் வெளியிட்டதற்கும், அதன்பின்னா் பாரதி குறித்த பல படைப்புகளை வெளிக்கொண்டு வருவதற்கும் எனக்கு தினமணி பேருதவியாக இருந்தது.

இந்த விருதானது பாரதி இலக்கியத்தில் இதுவரை சொல்லப்படாத செய்திகளை, விவரங்களையெல்லாம் வெளிக்கொணர வேண்டியதன் கடமையை அதிகரித்துள்ளது. தேசிய இயக்கத்தில், மதநல்லிணக்கத்தில், தேசிய கல்வியில், தேசிய நாகரிகத்தில் இதுவரை வெளிவராத தகவல்களையெல்லாம் திறனாய்வு செய்து புதிதாக மேலும் பல புத்தகங்கள் எழுத வேண்டும் என்ற தீா்மானத்துக்கு வந்துள்ளேன். அதற்கு அடிகோலியிருக்கிறது இந்த விருது. இந்த விருதை அளித்த தினமணிக்கும், இதுவரை எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறுகிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT