தமிழ்நாடு

குடியுரிமைத் திருத்தச் சட்டம்: நெல்லையில் காங்கிரஸார் உண்ணாவிரதம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

DIN

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார்.

முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தொடங்கி வைத்து பேசுகையில், 'இந்தியா முழுவதும் விலைவாசி கடுமையாக உயர்ந்து, பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலைகொள்ளாத மத்திய அரசு, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அவசரகதியில் அமல்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி இச் சட்டத் திருத்தத்தை கடுமையாக எதிர்க்கிறது. சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். ஜனநாயகத்திற்கு விரோதமாக கொண்டு வரப்பட்டுள்ள இச் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்' என்றார்.

இப்போராட்டத்தில் மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், நிர்வாகிகள் வானுமாமலை, முரளிராஜா, சொக்கலிங்ககுமார் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT