தமிழ்நாடு

பேரணி அல்ல; போர் அணி: மு.க. ஸ்டாலின் பேச்சு

DIN


சென்னை : குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்றது பேரணி அல்ல, போர் அணி என்று பேரணியின் நிறைவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இன்று காலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய பேரணி, சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது.

இந்தப் பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடக் கட்சித் தலைவர் கி. வீரமணி, எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் முன்னிலையில் பேசிய மு.க. ஸ்டாலின், இந்த பேரணி ஒட்டுமொத்த சென்னையையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. திமுகவின் போராட்டம் என்பது சமத்துவத்திற்கான போராட்டம் - சகோதரத்துவத்துக்கான போராட்டம் - ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம் - நீதிக்கான போராட்டம்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்றது பேரணி அல்ல; போர் அணி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை திமுக கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும்.

மதத்தால் மக்களைப் பிளவுபடுத்தும் குடியுரிமைச் சட்டத்தை நாம் எதிர்க்காமல் இருக்க முடியுமா? இனத்தால் ஒன்றான தமிழர்களைப் பிரிப்பது எப்படி நல்ல சட்டமாக அமைந்திட முடியும்?" என்றும் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT