தமிழ்நாடு

பேரணி செல்லும் வழியில் 50 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் சென்னையில் இன்று நடைபெறும் பேரணி, வழிநெடுகிலும் 50 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணியை காவல்துறையினர் மேறகொண்டுள்ளனர்.

DIN


சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் சென்னையில் இன்று நடைபெறும் பேரணி, வழிநெடுகிலும் 50 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணியை காவல்துறையினர் மேறகொண்டுள்ளனர்.

பேரணி செல்லும் வழி நெடுகிலும் சுமார் 50 சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறையினர் பேரணியை கண்காணித்து வருகிறார்கள்.

அதேப்போல 4 டிரோன் கேமராக்களையும், காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இன்று காலை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து ஸ்டாலின் தலைமையில் அமைதியான முறையில் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி பேரணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கோஷங்களை எழுப்பியவாறும், கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும் செல்கிறார்கள்.

புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் மைதானத்தில் இந்தப் பேரணி முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT