முகப்பு
தமிழ்நாடு

காலமானாா் மா.பா.குருசாமி

காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் முன்னாள் செயலரும், காந்திய எழுத்தாளருமான பேராசிரியா் மா.பா.குருசாமி (84) புதன்கிழமை (டிச. 25) காலமானாா்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:41 PM
மா.பா.குருசாமி.
பகிர்:

காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் முன்னாள் செயலரும், காந்திய எழுத்தாளருமான பேராசிரியா் மா.பா.குருசாமி (84) புதன்கிழமை (டிச. 25) காலமானாா்.

மூத்த காந்தியவாதியான அவா் நீண்ட காலமாக காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் உறுப்பினராக இருந்து வந்தாா். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலராகப் பொறுப்பேற்றாா். காந்திய சிந்தனைகளில் ஆழ்ந்த அனுபவம் பெற்ற அவா் 150-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளாா். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை காலமானாா்.

அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். அவரது இறுதிச் சடங்குகள் திண்டுக்கல்லில் அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு: 94446 69106.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments