தமிழ்நாடு

விவேகானந்த கேந்திரத்தில் குடியரசுத் தலைவர் பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடல்

DIN

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடினார். 

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விவேகானந்தரின் குமரி வருகை குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே  வியாழக்கிழமை உரையாடினார். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக புதன்கிழமை கன்னியாகுமரி வந்தார். தனிப்படகு மூலம் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் சென்று பார்வையிட்டார்.

இரண்டாம் நாளான வியாழக்கிழமை கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து காலை 9.45 மணிக்கு விவேகானந்த கேந்திரம் சென்றார். அங்கு அவரை கேந்திர துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து, அங்குள்ள ராமாயண கண்காட்சி கூடம், பாரதமாதா கோவில் ஆகியவற்றைப் பார்வையிட்டார். பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் விவேகானந்தரின் குமரி வருகை குறித்து கலந்துரையாடினார்.

அதன் தொடர்ச்சியாக, கேந்திர நிர்வாகம் சார்பில் குடியரசுத் தலைவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. காலை 10.40 மணிக்கு கேந்திரத்தில் இருந்து அரசு விருந்தினர் மாளிகை வந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT