உதகையில் சூரிய கிரகணத்தை கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்
உதகையில் இன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தை சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் தொலைநோக்கி மூலம் கண்டு ரசித்தனர்.
உதகையில் இன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் கண்டு ரசித்தனர்.
பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரன் சூரியனை மறைத்து பூமியில் வெயில் விழாதபடி மறைக்கும் சூரிய கிரகண நிகழ்வு இன்று நடைபெற்றது.
சூரியனை விட சந்திரன் அளவு குறைவாக இருப்பதால் சூரியனின் விளிம்பு பகுதி வெளியில் தெரியும். இதனால் சூரியனைச் சுற்றி சிவப்பு நிறத்துடன் கூடிய வட்ட வடிவ வளையம் தோன்றியது.
Advertisement
இன்று காலை 08.08 மணிக்கு துவங்கிய சூரிய கிரகணம் சுமார் 9.35 மணிக்கு நேராக வரும் சந்திரன் சூரியனை மறைத்தது. சுமார் 5 நிமிடங்கள் நீடித்த இந்த சூரிய கிரகணத்தை பார்க்கும் வகையில் உதகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த சூரிய கிரகணத்தை தொலை நோக்கி மூலமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் கண்டு ரசித்தனர்.