சூரிய கிரகணம்: சூலூரில் உலக்கை நிற்க வைக்கும் பாரம்பரிய முறை
சூலூரில் சூரிய கிரகணத்தை அறிய தண்ணீர் பாத்திரத்தில் உலக்கை நிறுத்திவைக்கும் பாரம்பரிய முறையை இன்று கடைப்பிடித்தனர்.
சூலூரில் சூரிய கிரகணத்தை அறிய தண்ணீர் பாத்திரத்தில் உலக்கை நிறுத்திவைக்கும் பாரம்பரிய முறையை இன்று கடைப்பிடித்தனர்.
சூலூர் அருகே கன்னம்பாளையத்தில் பொதுமக்கள் சூரிய கிரகணம் ஏற்படுவதை அடுத்து எப்பொழுது சூரிய கிரகணம் முடிவடைகிறது என்பதைத் தெரிந்துகொள்ளப் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கும் முறையான தண்ணீர் பாத்திரத்தில் உலக்கையை நிறுத்தி வைத்து அதைச்சுற்றிக் கும்மியடித்துக் குலவையிட்டு சூரிய கிரகணம் முடியும் நேரத்தை அறிந்து கொண்டனர்.
இந்த முறை தமிழர்களின் பாரம்பரிய முறையாகும். சூரிய கிரகணம் முடிவடையும் வரை உலக்கை விழாமல் அந்த பாத்திரத்தின் மீது நின்று கொண்டிருந்தது.