முகப்பு
தமிழ்நாடு

வங்கிப் பணத்தில் 37 கள்ள நோட்டுகள்: போலீஸார் தீவிர விசாரணை

தஞ்சாவூர், கும்பகோணத்தில் வங்கிப் பணத்தில் 37 கள்ள நோட்டுகள் இருந்ததாக வரப்பெற்ற புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:43 PM
பகிர்:

தஞ்சாவூர், கும்பகோணத்தில் வங்கிப் பணத்தில் 37 கள்ள நோட்டுகள் இருந்ததாக வரப்பெற்ற புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை ரிசர்வ் வங்கியில் உதவிப் பொது மேலாளராகப் பணியாற்றி வருபவர் டி.எம். சேனாதிபதி. இவர் தஞ்சாவூர் மாவட்டக் குற்றப் பிரிவில் அண்மையில் புகார் அளித்தார். அவர் அளித்த புகார் மனுவில், 'கும்பகோணத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முதன்மைக் கிளையில் இருந்து கடந்த ஜனவரி மாதத்தில் வரப்பெற்ற ரொக்கத்தில் 3 கள்ள நோட்டுகள் இருந்தன. இதேபோல, ஜூன் மாதத்தில் தஞ்சாவூரில் உள்ள இரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்தும், கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியிலிருந்தும் வந்த ரொக்கத்தில் 28 கள்ள நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது. 

பின்னர், ஆகஸ்ட் மாதத்தில் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் இருந்து வரப்பெற்ற ரொக்கத்தில் 6 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன' என அவர் கூறியுள்ளார்.


இதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர். மேலும், வங்கிகளுக்குக் கள்ள நோட்டுகள் வந்தது எப்படி? யார் மூலம் வந்தது? உள்ளிட்ட கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →