முகப்பு
தமிழ்நாடு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் பெண்கள் கோலமிடும் போராட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் கோலம் போடும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். 

Updated On : 29 டிசம்பர், 2019 at 1:08 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 7:13 PM

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் கோலம் போடும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். 

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் சமூகநல அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் சென்னையில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெசன்ட் நகரில் தெருக்களில் மற்றும் சாலைகளில் பெண்கள் No to NRC, No to CAA என்ற வாசகங்களுடன் கோலமிட்டு வருகின்றனர். தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 7 பெண்களை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களை விடுவித்தனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.